தாய்லாந்தில் ஒரு இந்தியர், கடற்கரையில் வெளிநாட்டுப் பெண்களை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாக புகைப்படம் எடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ரிஷப் யாதவ் என்பவர் பதிவிட்ட இந்த வீடியோவில், இந்தியர்கள் சிலர் கடற்கரையில் அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவர் தன் போன் கேமராவை ஜூம் செய்து அருகில் இருந்த பெண்களை புகைப்படம் எடுப்பது தெரிகிறது. இந்தச் செயலைக் கண்டித்த யாதவ், “சமூகப் பொறுப்புணர்வின்மை மிகவும் வெட்கக்கேடானது, இதை நாம் ஆழமாக வேரூன்றி கற்பிக்க வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Rishabh Yadav 🇮🇳 (@wanderwithrishabh)

“>

இவர்களைப் போன்றவர்களால் தான் வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கோபத்தையும், வெட்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். “மரியாதை மற்றும் சம்மதம் என்பது அடிப்படை விஷயம்,” “பயணம் செய்வது என்றால் நல்லொழுக்கத்தை வீட்டில் விட்டுச் செல்வது என்று அர்த்தமல்ல,” “இப்படிப்பட்டவர்களால் மற்ற சுற்றுலாப் பயணிகளின் அனுபவம் கெடுகிறது,” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிலர், “முழுச் சூழல் தெரியாது, ஆனால் ஒருவரை சங்கடப்படுத்துவது தவறு” என்றும், “சுற்றுலா யாருக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறவோ அல்லது ஒருவரை ஒரு பொருளாகப் பார்க்கவோ உரிமையைக் கொடுக்கவில்லை” என்றும் கூறியுள்ளனர். மரியாதை இல்லாத செயல்கள் இந்திய சுற்றுலாப் பயணிகளின் பிம்பத்தை சேதப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.