சமூக வலைத்தளங்களில் தற்போது எறும்புகள் கூட்டமாகச் சித்திரவதை செய்யப்படும் வீடியோ ஒன்று வெளியாகி, ஒட்டுமொத்த இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எறும்புகள் அவற்றின் சுறுசுறுப்பிற்கும் ஒற்றுமைக்கும் பெயர் போனவை என்றாலும், அவற்றை ஒரு பாத்திரத்தில் அள்ளிப் போட்டு உயிரோடு தீயில் பொசுக்குவதும், தட்டில் வைத்து வறுப்பதும், உருட்டுக் கட்டையால் நசுக்குவதுமான கொடூரக் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. வெறும் ‘லைக்குகளுக்காகவும்’ ‘வியூஸ்களுக்காகவும்’ இத்தகைய மனிதாபிமானமற்ற செயல்கள் அரங்கேற்றப்படுவது அனைவரின் ரத்தத்தையும் கொதிக்க வைத்துள்ளது.

​இந்தியாவின் சில மாநிலங்களிலும் பிற நாடுகளிலும் எறும்புகளைச் சமைத்துச் சாப்பிடும் கலாச்சாரம் இருந்தாலும், இந்த வீடியோவில் காட்டப்படும் விதம் ‘உணவு’ என்பதையும் தாண்டி ஒரு ‘கூட்டுப் படுகொலை’ போல இருப்பதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய குரூரமான வீடியோக்களைப் பார்ப்பதாலேயே அவை இன்னும் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்று ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர். எது எப்படியோ, எறும்புகளின் உயிரோடு விளையாடும் இந்தச் செயல், இணையத்தில் தார்மீக ரீதியான மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.