தன் வீட்டு வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை, பசியோடு வந்த ஒரு மாட்டிற்குத் தன் உணவைப் பகிர்ந்து கொடுக்கும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வாயில்லா ஜீவன் பசியோடு நிற்பதைக் கண்ட சிறுமி, ஒரு நொடி கூட யோசிக்காமல் தன் தட்டில் இருந்த உணவை எடுத்துத் தன் பிஞ்சு கைகளால் மாட்டிற்கு ஊட்டி விடுகிறார்.
A tiny hand, a big heart, little girl shares her food with a cow and teaches us kindness 🥺 pic.twitter.com/aWYDFE93nH
— Krishnan Gaur (@Mercedes5494) April 23, 2026
இந்தக் கருணை உள்ளம் கொண்ட குழந்தையின் வீடியோ தற்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. “இந்தக் காலத்துல மனுஷங்களுக்கே இந்த மனசு இல்ல, இந்தக் குழந்தை உலகிற்கே பாடம் புகட்டியுள்ளது” என நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
