பீகார் மாநிலம் தர்பங்காவில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயிலின் மேற்கூரையில் ஏறி, வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் அதிர வைத்துள்ளது. அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வாலிபரை கீழே இறங்குமாறு பலமுறை எச்சரித்தும், அதைக் காதில் வாங்காத அவர், ரயிலின் மேலிருந்து ஆபத்தான முறையில் ஹை-வோல்டேஜ் மின்சார கம்பியைத் தொட்டுள்ளார். அவர் தொட்ட அடுத்த நொடியே, ஒரு மிகப்பெரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பொறி பறக்க, அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்த காட்சி பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது.
📍 Laheriasarai, Darbhanga, Bihar: A man climbed onto a stationary freight train and touched a live overhead wire despite people shouting for him to come down.
He received a severe electric shock and caught fire on the spot, losing his life. pic.twitter.com/0EEnf1IdXw— Deadly Kalesh (@Deadlykalesh) April 23, 2026
இந்தக் கொடூரமான விபத்து தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. அந்த வாலிபர் யார், எதற்காக ரயிலின் மேல் ஏறினார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரு நொடி கவனக்குறைவும், அதீத துணிச்சலும் ஒரு மனிதனின் உயிரை எப்படிப் பறிக்கும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சியாக மாறியுள்ளது.
