செகண்ட் ஹேண்ட் பொருளைக் கம்மி விலைக்கு வாங்க ஆசைப்பட்ட ஒரு நபருக்கு, எதிர்பாராத விதமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் ஜாக்பாட்டாகக் கிடைத்துள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் சாம்சங் டிரையர் மெஷின் ஒன்றை வாங்கிய அந்த நபர், அது சரியாக வேலை செய்யவில்லை எனச் சொல்லி மெஷினை விற்றவரைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் அந்தப் புகாரைக் கேட்காமல், வாங்குபவரை ‘பிளாக்’ செய்து விட்டுத் தலைமறைவாகியுள்ளார். வேறு வழியின்றி மெஷினைப் பழுதுபார்க்க டெக்னீஷியனை அழைத்துப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே கட்டு கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

​அந்தப் பணக்கட்டுகள் மெஷினுக்குள் நெருக்கமாக இருந்ததாலேயே அது வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்க்கும் பலரும் “செல்லர் உங்களைத் தெரியாமல் பிளாக் செய்து உங்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டைத் தேடித்தந்துவிட்டார்” எனக் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், மெஷினின் மிகச்சிறிய துளைகள் வழியாக இவ்வளவு பெரிய பணக்கட்டுகள் எப்படி உள்ளே செல்ல முடியும் எனச் சில நெட்டிசன்கள் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துச் சந்தேகம் எழுப்பி விவாதம் செய்து வருகின்றனர்.