தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழ்நாட்டை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமான் ஆகியோரின் கூட்டணிக்கு அழைத்த நிலையில் அனைவருமே எடப்பாடி பழனிச்சாமியின் கூட்டணி அழைப்பை நிராகரித்துவிட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகனிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, இபிஎஸ் கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்தும் யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும் என்றார்.
அதன் பிறகு 234 தொகுதிகளிலும் பை பை மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு பை பை என்ற ஹேஷ்டேக்கை முன்னெடுத்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அதற்கு அந்த அளவுக்கு வந்துவிட்டாரா என்று கேட்டார்.
