அதிமுக கூட்டணிக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வருகிறதா என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரம்மாண்ட கட்சி இணைய போவதாக கூறியது தவெக-வையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர் தவெகவாகக் கூட இருக்கலாம். ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதில் ஐம்பதை கூட நிறைவேற்றாத திமுக மீண்டும் மக்களே சந்திக்க வருகிறார்கள். எது நடந்தாலும் ஒரே வார்த்தையில் சாரி என்று முதல்வர் கூறுவது போல திமுகவினர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சாரி என்று கூறி மன்னிப்பு கேட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
