தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 3 நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்ய, மார்க்சிஸ்ட் கட்சி இவ்வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரியது. அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், செளந்தர், விஜயகுமார் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
