தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தர்மசங்கடமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் மனு தற்போது அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் முறையாக வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அதிமுகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முன்வைத்தனர்.

அதிமுகவினரின் இந்த அதிரடி ஆட்சேபனையைத் தொடர்ந்து, அவரது வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க செங்கோட்டையனுக்கு இன்று மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை சரியான விளக்கம் அளிக்காவிட்டால் மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதால், தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.