தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர் பாரியின் மனு அதிகாரிகளால் அதிரடியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனுவில் ஒரு முக்கியப் பக்கத்தைப் பூர்த்தி செய்யாமல் விட்டதே இந்தத் தள்ளுபடிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இருப்பினும், ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, பாரிக்கு மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்திருந்த அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

இதன் மூலம் சிதம்பரத்தில் பாரிக்குப் பதிலாக அவரது தந்தை நெடுஞ்செழியன் தவெக சார்பில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.