விஜய் அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவரது சினிமா வாழ்க்கை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யுடன் அதிக படங்களில் நடித்தவர் திரிஷா என்றாலும், அவருக்குக் காதலி, மனைவி மற்றும் தாய் என மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்த பெருமை ‘புன்னகை அரசி’ சினேகாவையே சேரும்.

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ‘வசீகரா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சினேகா, சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கோட்’ படத்தில் மீண்டும் அவருடன் இணைந்தார் இந்த ‘கோட்’ படத்தில் விஜய் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

“>

இதில் தந்தை விஜய்க்கு மனைவியாகவும், மகன் விஜய்க்கு தாயாகவும் சினேகா நடித்து அசத்தியிருப்பார். இதன் மூலம் விஜய்க்கு காதலி, மனைவி, தாய் என மூன்று நிலைகளிலும் நடித்த நடிகை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். இதேபோல் ‘மெர்சல்’ படத்தில் நித்யா மேனனும் விஜய்க்கு மனைவியாகவும், தாயாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.