தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று, புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்குத் திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் குவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில், “இறுதிக்கட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற மாண்புமிகு முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணாவிற்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு பேரே வரலாறு!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.