உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டை பயன்படுத்துபவர்களுக்கு எளிதான முறையில் செயல்படுகிறது. அப்படி வாட்ஸ் அப்பில் ஒரு புதிய அம்சம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

இதன் மூலம் வாட்ஸ் அப்பில் இருந்து எந்த செயலிகளுக்கும் செய்திகளை அனுப்ப முடியும். ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் சந்தை சட்டம் கொண்டு வந்த அழுத்தம் காரணமாக இந்த அம்சம் மார்ச் மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது