உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செய்தியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பயனர்களுக்கு ஏராளமான புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது வாட்ஸ் அப் பயனர்கள் இனி டெலிகிராம், சிக்னல் மற்றும் google சாட் போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கு நேரடியாக செய்தி அனுப்ப முடியும். மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.