ஜியோ மீண்டும் ஏர்டெல் நிறுவனத்துடன் போட்டியிடும் வகையில் இலவச திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது அழைப்பு மற்றும் டேட்டா வாங்கும் போது ஓடிடி சந்தா கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் 1198 ரூபாய் திட்டத்தைப் பற்றி பார்க்கும் போது இது 14 ஓடிடி இயங்கு தளங்களுக்கு சந்தாவை வழங்குகின்றது. ஜியோ டிவி அப்ளிகேஷன் இதில் கிடைக்கும்.

நீங்கள் எங்கும் நேரலை டிவியை பார்க்க முடியும். இதற்காக கூடுதல் தொகை எதுவும் செலுத்த வேண்டாம். அது மட்டுமல்லாமல் இதில்  Jio சினிமா பிரீமியம், Disney+Hotstar, Zee5, SonyLIV, Prime Video (Mobile), Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet Marathi, Chaupal, EpicON மற்றும் Kanchcha Lannka ஆகியவை அடங்கும்.