உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் தினம்தோறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் இப்படி புகைப்படம் அல்லது வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யும்போது நாம் அப்லோடு செய்யும் உண்மையான தரத்தில் இருந்து குறைவான தரத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாம் துல்லியமாக எடுக்கும் புகைப்படம் கூட அதில் பதிவேற்றம் செய்யும்போது மங்கலாக மாறிவிடுகிறது.

இன்ஸ்டாகிராம் அப்லோடு செய்யும் பதிவுகளின் தளத்தை குறைப்பதன் மூலம் லோடிங் வேகத்தை அதிகரிக்க முடியும் என்பதால் அப்படி செய்கிறார்கள். ஆனால் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு இது திருப்தி அளிக்காததால் சில செயல்முறையை பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவின் தரத்தை இன்ஸ்டாகிராமில் மேம்படுத்தலாம். முதலில் உங்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்ளே சென்று உங்களுடைய ப்ரொபைல் பக்கத்தில் வலது மேல் புறத்தில் இருக்கக்கூடிய மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதில் settings and privacy என்பதை கிளிக் செய்து media quality என்பதை தேர்ந்தெடுத்து அதில் காட்டப்படும் ஆப்ஷனில் upload at the highest quality என்பதை தேர்வு செய்ய வேண்டும். இனிமேல் தரமான புகைப்படத்தை நீங்கள் பெறுவதற்கு எந்த ஒரு தடையும் இருக்காது.