தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 14 இடங்களில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது.

அதாவது 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதன்படி தஞ்சாவூரில் 100.4 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரியும், நாமக்கல்லில் 102.2 டிகிரியும், திருச்சியில் 102. 38 டிகிரியும், கோவையில் 102.56 டிகிரியும், மதுரை நகரத்தில் 102.96 டிகிரியும், மதுரை ஏர்போர்ட்டில் 103.28 டிகிரியும், சேலத்தில் 104.18 டிகிரியும், கரூர் பரமத்தி பகுதியில் 104.36 டிகிரியும், திருத்தணியில் 15.08 டிகிரியும், வேலூரில் 105.98 டிகிரியும், தர்மபுரியில் 106.16 வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் ஈரோட்டில் 107.6 டிகிரியும், திருப்பத்தூரில் 106.52 டிகிரியும் பதிவாகியுள்ளது.