கோடை காலத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் 5 நாள் சுற்றுப்பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். அங்கு, பாம்பார் புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 5 நாள்கள் ஓய்வெடுக்கிறார். முதல்வர் வருகையிலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை