தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தீனா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்துக்கு தல என்ற பட்டம் வந்தது. இந்த படத்தில் லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் 23 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. அதோடு அவர் நடித்த பில்லா திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.