ஈராக் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதோடு விபச்சாரத்திற்கு சிறை தண்டனை, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் ஆகியோருக்கு தண்டனை போன்ற அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக நாட்டில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்க பட்டிருந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பால் பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.