வாட்ஸ் அப் நிறுவனம் பயன்களின் வசதிக்காக அடிக்கடி புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது ஒரு அற்புதமான அம்சத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நியர் பை ஷேர் மற்றும் ஏர் டிராப் போன்ற இணைய இணைப்பு இல்லாமல் பைல்களை பகிரும் வசதியை கொண்டு வர உள்ளது. தற்போது இது சோதனைக் கட்டத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. பீப்பிள் நியர் பை என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்படவுள்ளது.