ஓடிடி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜியோ ரீசார்ஜ் மூலம் ஹாட்ஸ்டாரை முற்றிலும் இலவசமாக பெறலாம். தற்போது இந்த சந்தாவை 400 ரூபாய்க்கு குறைவான எந்த ஜியோ திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும். ஜியோ 388 ரூபாய் திட்டமானது 28 நாட்கள் செல்லுபடி ஆகக்கூடியது.

இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவுடன் வருகின்றது. இந்த திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 56 gb பெற முடியும். ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்கு மூன்று மாதங்கள் வரை இலவச disney+ hotstar மொபைல் சந்தா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரீசார்ஜ் செய்த பிறகு உங்களுடைய மொபைலில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயன்பாட்டை திறந்து நீங்கள் ரீசார்ஜ் செய்த அதே எண்ணில் இருந்து செயல்படுத்தலாம்.