இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தற்போது வாட்ஸ் அப் மூலம் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதாவது மிஸ்டு கால், வீடியோ அழைப்புகள், வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் உட்பட ஏழு வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் பணம் திருடப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.