இந்தியாவில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்னதாக பட்டியலிட்டு மாதம் தோறும் வெளியிடுகிறது. அதனைப் பொறுத்து தான் அனைத்து வங்கிகளுக்கான விடுமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, வார இறுதி நாட்கள் மற்றும் பொங்கல் பண்டிகையை தவிர்த்து மேலும் சில விடுமுறை நாட்கள் உள்ளன. மாதத்தின் இறுதி பகுதியை எட்டியுள்ள நிலையில் வரவுள்ள விடுமுறை நாட்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதாவது இன்னும் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வரவுள்ளது. எனவே பொதுமக்கள் வங்கி சார்ந்த சேவைகளை திட்டமிட்டு முன்னரே முடித்துக் கொள்வது நல்லது.

  • 23 ஜனவரி 2024 செவ்வாய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்தி பல மாநிலங்கள்
  • 25 ஜனவரி 2024 வியாழன் மாநில தினம் ஹிமாச்சல பிரதேசம்
  • 26 ஜனவரி 2024 வெள்ளி குடியரசு தினம் இந்தியா முழுவதும்
  • 27 ஜனவரி 2024 சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை நாடு முழுவதும்
  • 31 ஜனவரி 2024 புதன் மீ-டேம்-மீ-ஃபை அசாம்