இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாட்டுக்கு நெட்வொர்க் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் மொபைல் போனில் சரியாக நெட்வொர்க் கிடைக்காமல் போகும். அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் உங்களது மொபைல் ரீஸ்டார்ட் செய்வதன் மூலமாக நெட்வொர்க் குறித்த பிரச்சனையை தீர்க்க முடியும்.

ரீஸ்டார்ட் செய்தும் உங்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை இருந்தால் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவை மாற்றலாம். அடுத்ததாக வைஃபையை நிறுத்திவிட்டு டேட்டாவை நீங்கள் பயன்படுத்தலாம். அப்படி இருந்தும் உங்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை தீரவில்லை என்றால் சிம் கார்டை வேறு செல்போனில் பொருத்தி சோதனை செய்து பார்க்கலாம். இது சரியாக இருந்தால் நீங்கள் போனை மாற்ற வேண்டும். ஒருவேளை சரியாக இல்லை என்றால் மொபைல் செட்டிங் சென்று வயர்லெஸ் மற்றும் நெட்வொர்க் செட்டிங்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் மொபைல் நெட்வொர்க் என்பதை தேர்ந்தெடுத்து நெட்வொர்க் ஆபரேட்டர்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு நெட்வொர்க் பயன்பாட்டை தேர்வு செய்ய வேண்டும். அப்படியும் சரியாகவில்லை என்றால் பிளைட் மோடு ஆன் செய்து பிறகு சிறிது நேரம் கழித்து ஆப் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்தும் நெட்வொர்க் வேலை செய்யாமல் இருந்தால் உங்களுடைய போனில் OS புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.