உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பயனர்களை நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த மல்டி அக்கவுண்ட் அம்சத்தை whatsapp செயலி சோதனை முயற்சியாக தொடங்கியுள்ளது.

இதன் மூலம் பயனர்கள் ஒரே சாதனத்தில் பல்வேறு whatsapp கணக்குகளை இணைத்து ஸ்விட்ச் செய்து பயன்படுத்த முடியும். ஏற்கனவே இந்த அம்சம் telegram உள்ளிட்ட செயலிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒருவேளை இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் whatsapp செயலியில் மல்டி அக்கவுண்ட் அம்சத்தை பயன்படுத்த முடியும்.