உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புது விதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. தற்போது பயணங்களில் அம்சத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஒரு whatsapp செயலிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட்டை லாகின் செய்து கொள்ளும்படியான அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.

தற்போது வரையில் ஒரு whatsapp செயலியின் மூலமாக ஒரு அக்கவுண்ட் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக மற்றொரு வாட்ஸ் அப் அக்கவுண்டையும் க்யூ ஆர் கோடு மூலமாக லாகின் செய்து பயனர்கள் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல் தேவையில்லாத போது logout செய்து கொள்ளும்படியான வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புதிய அப்டேட் whatsapp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.