இன்றைய காலகட்டத்தில் பலரும் youtube பயன்படுத்தி வரும் நிலையில் இதனை பயன்படுத்தி ஸ்பேம் மற்றும் மோசடிகள் அதிகரித்து வருகின்றது. Youtube வீடியோ களுக்கு கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடப்படும் லிங்க்குகளில் தான் இந்த வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. யார் வேண்டுமானாலும் எந்த youtube வீடியோக்களுக்கும் கீழ் சென்று எந்த மாதிரியான லிங்குகளையும் பதிவிட முடியும். அப்படி பதிவிடும் மோசடி லிங்குகளை யூசர்கள் கிளிக் பண்ணும் போது மோசடியில் சித்துகின்றனர்.

இதனை தடுப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் கன்டென்ட் கிரியேட்டர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்பேம் மற்றும் மோசடிகளை எதிர்கொள்வதற்கு கூகுளுக்கு சொந்தமான youtube வருகின்ற ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் shorts கருத்துக்கள் மற்றும் விளக்கங்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்ய முடியாதபடி செய்துள்ளது. யார் எந்த ஒரு லிங்கைகளை பதிவிட்டாலும் யூசர்கள் அதனை கிளிக் செய்தால் அந்த பக்கம் ஓபன் ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.