இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இவ்வாறு வாட்ஸ் அப் பயன்படுத்தும் பலரும் புதிய போன் வாங்கும்போது வாட்ஸ் அப் சேட் பேக்கப் மாற்றினால் எவ்வாறு மீட்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

அதற்கு முதலில் whatsapp messager புதிய பதிப்பை நிறுவிய பிறகு உங்களின் மொபைலில் உள்ள தொடர்புகள், புகைப்படங்கள் மற்றும் மீடியா என அனைத்தையும் வாட்ஸ் அப்புக்கு அனுமதி கொடுக்கவும்.

அதன் பிறகு மெசேஜ் மூலமாக ஆறு இலக்க சரிபார்ப்பு குறியீட்டை பெறுவதுடன் அது தானாகவே சரிபார்த்து விடும்.

எஸ் எம் எஸ் செய்திகளை அனுப்பவும் பார்க்கவும் வாட்ஸ் அப்பை அனுமதிக்க வேண்டும்.

உங்களின் ஆறு இலக்க எண் சரிபார்க்கப்பட்ட பிறகு சாட் பேக்கப் என்ற ஆப்ஷன் வரும். அதில் ரீஸ்டோர் என்ற ஆப்ஷனை உள்ளிட்டு கிளவுட் ஸ்டோரேஜ் இல் இருந்து உங்கள் ஸ்மார்ட் போனில் செய்திகள் மேக்கப் எடுக்கப்படும்.

பின்னர் சாட் பேக்கப் எடுத்த கூகுள் கணக்கில் உள் நுழைந்து உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நெக்ஸ்ட் என்பதை தேர்வு செய்து தொடர்ந்து சுயவிவர தகவல் ப்ரோபைல் இடத்தில் உங்களது பெயரை குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு சில நொடிகளில் துவக்கம் வர ஆரம்பித்து விடும் நிலையில் அதில் வாட்ஸ்அப் அரட்டை திரையாக இருக்கும்.

இதில் உங்களின் வாட்ஸ் அப் சாட் பேக்கப் அனைத்தும் எடுக்கப்பட்டிருக்கும்.