தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை அதாவது 25 நாட்களுக்கு இருக்கும்.
அதன் பிறகு கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இன்று முதல் வருகின்ற 5-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 5 டிகிரி முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். மேலும் உள் மாவட்டங்களிலும் இயல்பை விட வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
