மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜெ. குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இந்நிலையில் ஜெ. குமாரின் பதவி காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பதவியேற்ற பிறகு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் குமாருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். இந்நிலையில் நிதி நெருக்கடி மற்றும் உடல்நலக்குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் குமார் துணைவேந்தர் பதவியில் இருந்து விலகுவதாக கூறி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரவியிடம் கொடுத்துள்ளார். மேலும் இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட ஆளுநர் ரவி இது  தொடர்பாக என்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.