ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதத்திற்கு வழங்குவதற்காக ₹419 கோடி மதிப்பீட்டில் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 டன் துவரம் பருப்பு, 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது