சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம் கொடைக்கானலில் மலர் கண்காட்சி நடைபெறுகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள்  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை சார்பாக மலர் கண்காட்சியும் சுற்றுலாத்துறை சார்பாக கோடை விழாவும் மே 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவை காண சுமார் 5 லட்சம் பேர் வருவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.