ஸ்பெயின் நாட்டின் இளம் கால்பந்து ஜாம்பவானாகத் திகழும் லாமின் யமால்  மற்றும் அவரது காதலியும் பிரபல இன்ஃப்ளூயன்ஸருமான இனெஸ் கார்கியா சாண்டோஸ்  ஆகியோரின் காதல் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு சூடான விவாதப் பொருளாகியுள்ளது. கொலம்பியா சுற்றுலா சென்றபோது லாமின் யமால் வேறு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, இனெஸ் பகிர்ந்த சில மறைமுகப் பதிவுகள் இந்தச் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.

சமீபத்தில் இனெஸ் பெயரில் வெளியான சில சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவின. அதில், “பணத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு என்னுடைய முன்னாள் காதலனை கைவிட்டு லாமின் யமாலுடன் சென்றேன்; ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்” என்று அவர் கூறியதாகக் கூறப்பட்டது. மேலும், முன்னாள் காதலனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் சேர்த்துக்கொள்ளும்படி கெஞ்சியதாகவும், லமின் யமாலின் தொடர்ச்சியான ஏமாற்று வேலைகளால் அவருடன் உள்ள உறவை அதிகாரப்பூர்வமாக முறித்துக்கொள்வதாகவும் அந்த வீடியோக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்கள் அனைத்தும் தீயாய் பரவத் தொடங்கியதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. லாமின் யமால் மற்றும் இனெஸ் இருவரும் தாங்கள் பிரிந்துவிட்டதாகவோ அல்லது இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்றோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து மைதானத்தில் தனது அசாத்திய திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த லமின் யமால், தனது தனிப்பட்ட வாழ்க்கை மூலமாகவும் தொடர்ந்து ஊடகங்களின் வெளிச்சத்தில் இருந்து வருகிறார். மறுபுறம், இன்ஃப்ளூயன்ஸரான இனெஸ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு வதந்திகள்  மற்றும் கேலி கிண்டல்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

முன்னதாக இது குறித்துப் பேசியிருந்த இனெஸ், “நானும் ஒரு மனிதள்தான்; என்னாலும் உணர்ச்சிவசப்படவும் அழவும் முடியும்” என்று கூறி, சமூக வலைதளங்களின் தொடர்ச்சியான விமர்சனங்கள் தன் மீது ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பரவி வரும் வகாணொளிகளும் முற்றிலும் உண்மையானவையா அல்லது திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், இந்த இளம் ஜோடியின் காதல் கதை தற்போது இணைய உலகை உலுக்கி வருகிறது.