பீகார் மாநிலம் சீதாமர்ஹி இரயில் நிலையத்தில் ஆபத்தான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை விட்டு மெதுவாக நகரத் தொடங்கிய இரயிலைப் பிடிப்பதற்காக, பயணி ஒருவர் ஓடிவந்துள்ளார்.
ஓடும் இரயிலைப் தவறவிட்டுவிடக் கூடாது என்ற அவசரத்தில், அவர் நகர்ந்து கொண்டிருந்த இரயிலில் பாய்ந்து ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சட்டை பேண்ட் பாக்கெட்டில் இருந்த விலையுயர்ந்த ஐபோன் நழுவி கீழே விழுந்தது.
ஓடும் இரயிலில் பாய்ந்து ஏறியதில் அதிர்ஷ்டவசமாக அவருக்குப் பெரிய அளவிலான ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அவரது ஐபோன் கைநழுவித் தண்டவாளப் பகுதியில் விழுந்து சேதமடைந்தது.
ஓடும் இரயிலில் பாய்ந்து ஏறுவது உயிருக்கே ஆபத்தானது என்றும், இதுபோன்ற அவசரச் செயல்களால் உயிரையும் உடைமைகளையும் இழக்க நேரிடும் என்றும் இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.
🚨 Sitamarhi: A passenger ran to board a train, but his iPhone slipped from his pocket and fell during the rush. pic.twitter.com/7Wf858wCj1
— indiainlast24hr (@indiain24hr) August 10, 2026
“>
சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, “கொஞ்சம் தவறினாலும் உயிர் போயிருக்கும், கைபேசி போனது பரவாயில்லை” என்றும், “எக்காரணம் கொண்டும் ஓடும் இரயிலில் தாவியேற வேண்டாம்” என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
