தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை நேற்று பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.