உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணிந்த பெண் ஒருவர் தலைமையிலான மர்ம கும்பல் பட்டப்பகலில் அடுத்தடுத்து இரண்டு துணிச்சலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கோத்தி பகுதியில் உள்ள மகேஷ் ஜூவல்லர்ஸ் கடைக்குள் வாடிக்கையாளர் போல நுழைந்த அந்தப் பெண், திடீரென துப்பாக்கியை நீட்டி நகைக்கடை உரிமையாளரை மிரட்டித் தங்கச் சங்கிலி மற்றும் நெக்லஸைக் கொள்ளையடித்துவிட்டு, வெளியே தயாராக நின்றிருந்த கூட்டாளியின் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

“>

இந்தச் சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, அதே கும்பல் மொஹல்லா மாலிக்சாதாவில் உள்ள கவுன்சிலர் முகமது ஷாஹித் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடியுள்ளது. அப்போது தடுக்க முயன்ற கவுன்சிலரின் மருமகளைத் தாக்கிவிட்டு, கூரையிலிருந்து குதித்து மர்ம நபர்கள் தப்பியோடினர்.

இந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களும் சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ள நிலையில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் கொள்ளைக்காரியையும் அவரது கூட்டாளியையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.