ஹைதராபாத்தில் வரதட்சணை கொடுமையால் 26 வயது மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான சில காலத்திலேயே தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் கூடுதல் வரதட்சணை கேட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அந்தப் பெண் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் மென்பொருள் துறையில் கைநிறையச் சம்பாதிக்கும் ஒரு படித்த பெண்ணுக்கே இந்த நிலை நேர்ந்திருப்பது, சமூகத்தில் வேரூன்றியிருக்கும் வரதட்சணை எனும் அரக்கனின் கோர முகத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.

தற்போது இந்த மரணம் தொடர்பாகக் கவலையளிக்கும் பல சித்திரவதை விவரங்கள் வெளிவந்துள்ளன. கணவனின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் மனமுடைந்த அந்தப் பெண், வேறு வழியின்றி தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு இளம் பெண்ணின் கனவுகளும் வாழ்வும் வரதட்சணை ஆசையால் சிதைக்கப்பட்ட இந்தச் சம்பவம், ஹைதராபாத் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது