கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதில் அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு வனத்துறையினர் சென்றனர்.

அப்போது அவர் வீட்டில் இல்லை. இதனால் அந்தப் பகுதி கவுன்சிலரின் துணையோடு அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவரது வீட்டின் சமையலறையில் மலைப்பாம்பை பிடித்து சமைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், பாம்பின் இறைச்சியை கைப்பற்றியினர். பின்பு பதுங்கி இருந்த ராமேஷை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வயல் பகுதிகளில் மலைப்பாம்பை பிடித்ததாகவும், அதனை பிடித்து ஸ்பெஷல் டிஷ் செய்ததாகவும் கூறினார்.

அதோடு காவல்துறையினர் ரமேஷை கோட்டில் ஆஜார் படுத்தினர். இதைத்தொடர்ந்து அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பாம்பின் இறைச்சி திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வுக்கூடத்திக்கு அனுப்பப்பட்டது. மேலும் வனச் சட்டத்தின் படி பாம்புகளை கொல்லுபவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.