அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத வகையில் காய்ச்சல் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,539 பேருக்குப் புதியதாகக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது.
சாதாரணமாக வரும் காய்ச்சல் மட்டுமின்றி, அங்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா தொற்று, கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் வௌவால்கள் மூலம் பரவக்கூடிய ஆபத்தான நிபா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
அடுத்தடுத்துப் பரவி வரும் இந்த மெகா நோய்த் தாக்குதல்களால் அம்மாநில பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, உயிருக்கு அஞ்சி கடும் பீதியில் உறைந்து போயுள்ளனர். பருவமழைக்காலம் தீவிரமடைந்து வருவதால், இந்தத் தொற்று நோய்கள் மேலும் பரவாமல் தடுக்க அம்மாநில சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
