ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த லாரியின் கூரை மீது ஏறி ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான முறையில் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பான சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் வேகத்தைக் குறைத்த ஓட்டுநர், தனது பக்கவாட்டுக் கதவைத் திறந்து லாரியின் கூரை மீது ஏறினார். லாரி தானாகவே நகர்ந்து கொண்டிருந்த வேளையில், அவர் அதன் மீது நின்றபடி ஆபத்தான முறையில் நடனமாடத் தொடங்கினார்.
சிறிது நேரம் நடனமாடிய பிறகு, அவர் மீண்டும் ஓட்டுநர் இருக்கைக்குத் திரும்பினார். ஆனால் அப்போதும் அவர் சாலையையோ அல்லது ஸ்டீயரிங்கையோ கவனிக்காமல் தொடர்ந்து நடன அசைவுகளைச் செய்துகொண்டே லாரியை இயக்கினார்.
மேலும், மீண்டும் கதவைத் திறந்து அதன் மீது நின்றபடியே எந்தவித அச்சமுமின்றி பரபரப்பான சாலையில் லாரியை முன்னோக்கிச் செல்லச் செய்தார். இந்த ஆபத்தான சாகசத்தை அவ்வழியே சென்ற பயணிகள் சிலர் வியப்புடனும் அதிர்ச்சியடனும் பார்த்தனர்.
‘Ednewsin’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ வைரலானதை அடுத்து, மற்றவர்களின் உயிரோடு விளையாடிய அந்த லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
