டெல்லி விமான நிலையத்தில் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து திரும்பி வந்த ஆண் இன்ஸ்டாகிராம் வீடியோ கிரியேட்டர் ஒருவரை, அங்கிருந்த குடிவரவு அதிகாரி ஒருவர் பாலின ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞர் வெளியிட்ட வீடியோவில், அந்த அதிகாரி தன்னைத் தனியாகச் சந்திக்க வருமாறும், தனது தொலைபேசி எண்ணைக் தருமாறும் தொடர்ந்து வற்புறுத்துவது தெளிவாகக் கேட்கிறது. தான் நண்பர்களுடன் வசிப்பதாகவும், தனது தொலைபேசி எண்ணைத் தர முடியாது என்றும் அந்த இளைஞர் மறுத்தபோதிலும், அந்த அதிகாரி விடாமல் எண்ணைக் கேட்டு வற்புறுத்தியுள்ளார்.

தொழில்முறை வீடியோ கிரியேட்டரான அந்த இளைஞர், தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி அனுபவத்தை விவரிக்கும் போது அவரது கண்களில் பயமும் பதற்றமும் தெளிவாகத் தெரிந்தன. தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், அந்த அதிகாரி தன்னிடம் தவறான எண்ணத்தோடு இப்படி நடந்துகொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘Ahil_Ibrani’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, இணையவாசிகளிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது. அரசுப் பணியில் இருக்கும் ஒரு அதிகாரி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இப்படி நடந்துகொண்டது அதிர்ச்சியளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Spot On (@spot.newsmedia)

“>

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அதிகாரியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.