உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து 7 வயது சொந்த மகனையே காரில் கடத்திக் கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய் குர்பிரீத் கவுர் மற்றும் அவரது காதலன் அர்பித் சர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் அங்கத்வீரை, “அங்கிள் சாக்லேட் வாங்கித் தருவார்” என்று கூறி தாயே காதலனுடன் அனுப்பி வைத்த அதிர்ச்சித் தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலைக்குப் பிறகு போலீஸாரிடம் இருந்து தப்பிக்க, “நீதான் அவனைக் கொன்றாய், என் பெயரை எங்கும் இழுக்காதே… இனி நீ தப்பிக்க முடியாது!” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண் தன் காதலனுக்கு அனுப்பிய ரகசிய வாட்ஸ்அப் சாட்டிங் விவரங்களை போலீஸார் தற்போது ஆதாரமாக மீட்டுள்ளனர். இருவரும் சேர்ந்து தப்பித்து ஓடி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அதிர்ச்சி வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் ஒட்டுமொத்த சதியும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.