இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘FDC’ (Fixed-Dose Combination) எனப்படும் 16 வகையான கூட்டு மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலோவேரா (கற்றாழை), வைட்டமின்-E மற்றும் காய்ச்சலுக்குப் போடும் பாராசிட்டமால் கலந்த சில குறிப்பிட்ட கூட்டு மருந்துகள் இந்தத் தடைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இது தவிர, மக்கள் தன்னிச்சையாகப் பயன்படுத்தும் தோல் நோய்க்கான கிரீம்கள், கடுமையான வலி நிவாரணிகள் (Pain killers) மற்றும் சில ஆன்டிபயாடிக் எஃப்டிசி (FDC) மருந்துகளுக்கும் மத்திய அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
இந்த மருந்துகளால் உடலுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மருத்துவர்களின் முறையான பரிந்துரை இல்லாமல் இனி யாரும் இவற்றை விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மெடிக்கல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
