ரஷ்யாவில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி, இரண்டு இளைஞர்கள் லிஃப்டிற்குள் பட்டாசுகளை வெடித்து விபரீத செயலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் தங்களின் செயலை மொபைல் போனில் படம் பிடித்துக்கொண்டே, குறுகிய இடமான லிஃப்டிற்குள் பட்டாசைக் கொளுத்தினர்.
இதனால் லிஃப்ட் முழுவதும் தீப்பொறிகள் சிதறி, கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்த இருவருக்கும் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், லிஃப்டின் உட்பகுதி சேதமடைந்தது.
இந்த பொறுப்பற்ற செயலால் ஆத்திரமடைந்த கட்டிட குடியிருப்பாளர்கள், அந்த இளைஞர்களைக் கண்டித்ததோடு அவர்களைக் கொண்டே லிஃப்டை சுத்தம் செய்ய வைத்தனர். மேலும், அவர்கள் செய்த தவறுக்காக குடியிருப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்கவும் வைக்கப்பட்டனர்.
சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஆபத்தான செயல்கள் உயிருக்கே உலைய வைக்கும் என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Фейерверк прямо в лифте устроили два суетолога из Мурино — сверхразумы зажгли пиротехнику в кабине лифта, надымили, испугались сами и напугали соседей.
После огненного шоу им пришлось извиняться и отмывать лифт. pic.twitter.com/ZtSLp3czbZ— ARSEN (@Ars7513) December 28, 2025
“>
பொது இடங்களில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
