தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா AI2379 விமானத்தில் ஏற்பட்ட கடும் டர்புலன்ஸ் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் நடுவானில் பலமாக குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்ததாகவும், சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் பயணி, சம்பவத்தின் போது விமான ஊழியர்கள் பயணிகளிடம் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். விமான நிறுவனத்தின் பெயருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் வீடியோ பதிவுகளை தவிர்க்குமாறு கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மேலும், விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றும் அந்த பெண் புகார் கூறியுள்ளார். அவசர சிகிச்சை ஏற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பயணியின் குற்றச்சாட்டுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வெளியிடவில்லை. சம்பவம் குறித்து விமான நிறுவனம் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
