கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவரை காப்பாற்றிய நீச்சல் பயிற்சியாளர் ஆர். ராஜேஷ், தன்னுடைய உயிரை தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரியங்கோடு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 61 வயது முதியவர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை மீட்க ராஜேஷ் துணிச்சலுடன் களமிறங்கினார்.
மீட்பு பணியின் போது அந்த முதியவருக்கு பாதுகாப்பாக இருக்க தனது லைஃப் ஜாக்கெட்டை ராஜேஷ் வழங்கியுள்ளார். இதையடுத்து அவரை கரைக்கு அழைத்து வர முயன்றபோது, ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் ராஜேஷ் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது இந்த தியாகம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கேரள வெள்ளம் மற்றும் 2024-ம் ஆண்டு வயநாடு பேரிடர் காலங்களிலும் ராஜேஷ் மீட்பு பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவி செய்துள்ளார். பல ஆண்டுகளாக மீட்பு சேவையில் ஈடுபட்ட அவரது துணிச்சல் மற்றும் மனிதநேயம் பலராலும் பாராட்டப்பட்டது.
ராஜேஷின் மறைவுக்கு கேரள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், ராஜேஷின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினார். ஒரு உயிரை காப்பாற்ற தனது உயிரையே அர்ப்பணித்த ராஜேஷின் செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
