தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி ஊசல்கள் வெளிப்படையாகவே அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு அணி என இரு பிரிவுகளாகவே அதிமுக செயல்படுகிறது. குறிப்பாக சி.வி சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வருகிறார்.

சமீபத்தில் எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதவிகள் எதுவும் தங்களுக்கு வேண்டாம் எனவும் மீண்டும் அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை சேர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆனந்தை எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம், கே.வி அன்பழகன் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்து தீவிர பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு தொகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்து பேசியதாக செய்தியாளர்களின் கேள்விக்கு எஸ்பி வேலுமணி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.