பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் ஒருவர், வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டும் விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாபாஸ் என்ற பயனர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இந்தத் தகவலின்படி, அவர் பன்னர்கட்டா செல்வதற்காக ‘ராபிடோ’ ஆட்டோவை முன்பதிவு செய்துள்ளார்.
அப்போது வந்த 35 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி தான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்குநராகப் பணியாற்றுவதாகவும், லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.
குடும்பச் செலவுகளுக்காகவும், தனது பொருளாதாரத் தேவைகளுக்காகவும் வார இறுதி நாட்களில் அவர் இந்த கூடுதல் வேலையைச் செய்வதாகத் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நகரங்களில் வாழ்க்கைச் செலவுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Today, while traveling to Bannerghatta, I booked a Rapido.
The rider, a 35-year old, started speaking in Kannada, realized mine wasn’t great, and switched to English. He asked what I do, and I told him I’m a software engineer.
Then he told me he’s also a software developer at… pic.twitter.com/wCfgB6Vb8D
— Shabaz (@Shabaz1406) June 6, 2026
“>
அதேசமயம், மனைவியின் ஆன்லைன் ஷாப்பிங் செலவுகளைச் சமாளிக்கவே அவர் ஆட்டோ ஓட்டுகிறார் என்றும், சிலர் அவரை கிண்டல் செய்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு மென்பொருள் பொறியாளரே பொருளாதார நெருக்கடிக்காக கூடுதல் வேலை செய்யும் நிலை உருவாகியுள்ளது, நவீன நகர வாழ்க்கையின் சவால்களைப் பிரதிபலிப்பதாகப் பலரும் கருதுகின்றனர்.
