நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்துவரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 1.20 லட்சம் முன்னாள்  ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பின்படி பொதுத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.